பெண்கள் மதுக்குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நவீன கால இஸ்ரேல் உள்ள ஹைஃப்பாவிற்கு அருகில் உள்ள ஒரு குகையில்,வரலாற்றிற்கு முந்தைய புதைகுழியில் பழமையான மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் பழமையான பீரின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை இறந்தவர்களைக் கொண்டாடும் சடங்கு விருந்துகளுக்கு உபயோகித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்தக் கல்குகைகளில் கோதுமை, பார்லி சாந்த மதுவகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல வேத காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த தரைவாழ் மக்கள், மலைவாழ் மக்கள், தஸ்யூ மக்கள் உள்ளிட்டோர் அரிசி, பார்லி, மற்றும் தினை மாவுகளினால் உற்பத்தியான சுரா பானத்தை அருந்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. வசிட்ட முனிவர், சுரா பானம், சூது வாது, அறியாமையால்தான் வாய்மொழியில் தவறுகள் ஏற்படுகிறது என்றும் சுரா பானம் பாவத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது கூறினார்.
இந்த நிலையில் மதுபானம் என்பது விவசாயத்திற்கு முந்தைய நிலை என்றும் அதுதான் விவசாயம் மற்றும் நாகரீதகத்திற்கு வழிவகுக்கும் என கருதியாக கூறப்படுகிறது.
கிமு 7 ஆயிரம் ஆண்டில் வட சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள புதிய கற்கால பகுதிய்டாக ஜியாகுவில் இருந்து புளிக்கவைக்கப்பட்ட ரசாயன ஜாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் கிமு 2100 ஆம் ஆண்டில் இருந்து சுமெரிய மற்றும் எகிப்தில நூல்களில் மதுவின் மருத்துவப் பயன்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. கிமு 55 ல் ரோமானியர்கள் பிரிட்டனில் பூர்விக ஆப்பிள்களை பயன்படுத்தி ஆல்கஹால் சைடர் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்கும் இது இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி குடிப்பழக்கம் என்பது எல்லா காலக்கட்டத்திலும் எல்லா பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. அது கால மாற்றினால் இன்னும் நாகரீட்கத் தன்மையடைந்து, அது நம் கலாச்சாரத்தோடும் இணைந்த ஒரு செயலாகிவிட்டது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் என்பது அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அம்மக்களிடையே இருந்தாலும் அது கிழக்கு நாடுகளிலும் தீவிரமாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இளைஞர்கள் அதிகமுள்ள இங்கு இளம் பருவத்தினரும் பெண்களும் மது அருந்தத் தொடங்கியுள்ளது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடிந்து, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கள்ளச்சாராயம் பற்றியும் விசச்சாராயம் பற்றியும் முந்தைய பதிவில் தெளிவாக கூறியிருந்தோம்.
இதனால் உயிர் பலிகள் ஏற்படும் என்று தெரிந்தும் கூட ஏன் விசச் சாராயம் பயப்படுத்தப்படுகிறது. அது உற்பத்தி செய்யப்படுகிறது என்பது பற்றி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே சந்தர்ப்பத்தில்தான் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் சிகரெட் , போதை, மது என சிக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் போதைப் பொருளுக்கு கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக 10000 போலீஸாரை இடமாற்றம் செய்து முதல்வர் பகவன் பான் உத்தரவிட்டிருந்தார். நேற்று சோசியல் மீடியாவில் அம்மா நிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் சிலர் நடு இரவு மற்றும் பகலில் போதையில் நடக்க முடியாமல் தள்ளாடியடி நிற்பது போன்ற வீடியோக்கள் பரவலானது.
இளைஞர்கள் அடிக்கடி நண்பர்களுடன் இணைந்து டிரீட், பார்டி, பப் கலாச்சார உள்ளிட்டவைகளில் ஈடுபடுவது நவ நாகரீகமாக பேசனாக இருந்தாலும், ஆரோக்கியம் மற்றும் சமூக விளைவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்,.
இந்த நிலையில் பெண்கள் மதுபானம் குடிப்பதால் என்ன பிரச்சனைகள் நேரும் என்பதைப்பற்றி விரிவாக காண்போம்!
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகிறது. இது குழந்தையின்மை சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மது அருந்துவது ஒரு மகிழ்ச்சிக்காக இருந்தாலும் அது குடிப்பதால் என்னவெல்லாம் உடலுக்கு பிரச்சனை நேருகிறது என்ன செய்கிறது என்பது பற்றி தெரியாது.
ஒருவேளை அதுபற்றி தெரியவந்தால் குடிப்பழக்கம் தடைபடும் என்று கருதியும் அதை பற்றி தெரிந்துகொள்ளாமலே தங்கள் உடலை கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
சரி இனி மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி அறிவோம். மது அருந்தினால் அது முதலில் இரைப்பைக்குச் செல்லும். அதில் 20 % ரத்தத்தில் கலந்துவிடும். ம் மீதி 80% சிறுகுடலுக்கு போய் சேரும். சிறு குடலுக்கு ரத்தம் ஈரல் வழியாக செல்லும்,. உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவதுதான் ஈரலின் வேலை எனும் போது, ஈரலுக்கு வரும் மதுவின் அளவுக்கு மிக அதிகமாகும் போது, இரல் தன் பணியைச் செய்ய முடியாது. ஈரலின் செயல்பாடு ஒழுங்கில்லாம;ல் போய் கடைசியில் பாதிக்கப்படும்.
ஒருவேளை விலை உயர்ந்த ரக மதுபானங்களை குடிப்பதால் பாதிப்பு இல்லையா என்றால்….. அது தரமாக இருந்தாலும், தரம் குறைந்ததாக இருந்தாலும், உடலுக்கு கேடு விளைவிப்பதை தடுக்க முடியாது. மது என்றால் அது தீங்கு என்பதை கருதித்தால் மது நாட்டிற்கு வீட்டிற்கு உயிருக்கு கேடு என்று கூறப்படுகிறது.
எனவே இந்த மது ரத்தத்தில் கலக்கும்போது முதலில் நரம்புகளைப் பாதிக்கும், . அதனால் நாள் ஆக ஆக போதையை உணர முடியாத அளவு உடலின் நரம்புகள் மரத்துப் போகும். இந்தக் காரணத்தால்தான் மது குடித்து பழக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்கள் போதையினால் உளவுதைக்காண முடிகிறது.
குறிப்பாக மது அருந்துபவர்களுக்கு அதனால் உடலின் உள்ளே பெரும்பகுதி பாதிப்படையும். அதனால் அவர்கள் அதிகளவில் ஏப்பம் விடுவர். குறைட்டையும் விடுவர். அதுமட்டுமின்றி, ஆல்கஹால் அவர்களின் மூளையையும் பாதிப்பதால் காலப்போக்கில் அவர்களுக்கு நிறைவாற்றலும் குறையும் நிலை ஏற்படும்…மேலும், மது குடிப்பது பாலியல் ஆர்வத்தை குறைத்துவிடும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் கட்டமைப்புகள் சீர்லைத்து இதயத்துடிப்புகள் அதிகமாகி, சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் அதுவும் கூடிவிடும்.
இந்த மதுப்பழக்கம் என்பது அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி மன நலக்கோளாறு கொண்டவர்களாக மாற்றிவிடும் ஆபத்துள்ளது.
அவர்களால் சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாமல் வேலையும் செய்ய முடியாத நிலையில் உடல் நிலையும் சீர்கெடும் அபராயம் ஏற்படும். . எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.
மது அருந்துவதால் ஆண்களின் ஈரல் பாதிக்கப்படுவது போன்று மது அருந்தும் பெண்களின் ஈரலும் பாதிக்கப்படும். இதனால் பெண்களின் ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும். இப்பழக்கத்தால் பெண்களிடம் ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, பெண் தன்மை குறையும். பெண்களின் உடலில் ஆண் தன்மை அதிகரிப்பது என்பது அவர்களின் இனப்பெருக்கத் திறமை குறைத்துவிடும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக புறக்கணித்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் ஏனென்றால் தாய் அருந்தும் மதுவினால் குழந்தையின் வளர்ச்சி, தோற்றம் அவர்களின் செயல்பாட்டு, அரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் பெண் மது அருந்தினால் அது அவர்களின் வருங்கால சந்ததிக்கு இழைக்கும் தீங்காக மாறும் தன்மையுடைது அதேபோல் புகைப்பிடிப்பது என்பது தாய்க்கு பிறக்கின்ற குழந்தைக்க்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
எனவே பெண்கள் இளைஞர்கள் மாணவர்கள் அனைவரும் மதுவின் கெடுதலை உணர்ந்து அதிலிருந்து விடுபடுதல் என்பது சமூகத்திற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.
பெண்கள் மதுக்குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?-சினோஜ் கட்டுரை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article’’ த்ரிஷா விவகாரம்….விஜய்யின் அரசியல் வாழ்க்கை என்னாகும்?’’
Keep Reading
Add A Comment