’’ த்ரிஷா விவகாரம்….விஜய்யின் அரசியல் வாழ்க்கை என்னாகும்?’’
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் அரசியல் கட்சிதொடங்கியுள்ள ஒருசில மாதங்களே ஆகும் நிலையில் அவரைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
கருணாநிதி, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா, என்.டி.ஆர். விஜயகாந்த் என அரசியலில் கோலோட்சிய தலைவர்கள் சினிமாவில் இருந்துதான் அரசியலில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
இதில்,எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் , ஜெயலலிதாவும் அரசியல் வாழ்க்கையில் இறுதிவரை இருந்து, மக்களின் மனதிலும் அரசியல் தளத்திலும் மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் வாழ்த்தையும் பெற்று இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் விழுதுகளாகவும், ஆதரவாளர்களாகவும் இன்றும் பல லட்சம் தொண்டர்கள் தமிழ் நாட்டில் அவர்கள் தலைமைப் பொறுப்பு வகித்த கட்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆனால் இன்றையகாலம் போல அன்றைய காலத்தில் அரசியல் செய்வதும் , கட்சியை வழி நடத்தித் தலைமைப் பதவிக்கு வருவது ஒன்றும் எளிதான விசயமில்லை.
அதற்கு அவ்வளவு மெனக்கெடல்களும்,தியாகமும் இருந்தால்தால் அத்தனை போட்டியாளர்களுக்கும் திறமையாளர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மத்தியில் அரசியலில் காலூன்ற முடியும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதுபோல் இந்த அரசியலில் யாரையும் நிரந்தர எதிரிகளாகவும் நண்பர்களாகவும் கருத முடியாது. காலம் யாரை எப்போது வீழ்த்தும், வாழ்த்தும் என்று யாராலும் யூகிக்க முடியாது. அதேபோல்தான் அரசியலும்.
எம்,ஜி.ஆர், கருணா நிதி , ஜெயலலிதா போல் அடுத்தடுத்து வந்த சினிமாத்துறையினரால் முதல்வர் பதவியை எட்ட முடியவில்லை. ஆனால் சமீபத்தில், ஆந்திரம் மா நிலச் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்த நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெற்றி பெற்றது. இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. சந்திரபாபு நாயுடு முதல்வராகவும், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணைமுதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இத்தனை ஆண்டுகளில் அரசியலில் தோல்வி மட்டுமே கண்டுகொண்டிருந்தவர், தன் அண்ணனும் சூப்பர் ஸ்டாருமான சிரஞ்சீவி கடந்த 2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் அதிலிருந்து விலகினார். சினிமாவில் எத்தனை பெரிய ஸ்டாராக இருந்தாலும் அரசியல் என்று வரும் போது அவர்களுக்கும் சறுக்கள் வருகிறது. ஆனால், பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டு ஜன சேனா கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து தோல்வியைத் தழுவியவருக்கு இந்த தேர்தலில் பெறும் வெற்றி கிடைத்தது.
தற்போது அவரது முயற்சிகளுக்கும் தோல்விகளுக்கும் துணைமுதல்வர் பதவி என்ற மகுடம் கிடைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமிதப்படுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இது தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள், ரசிகர்களுடன் மக்களும் திரளாக அவருக்கு ஆதரவு கொடுப்பதுபோல் பிம்பம் உருவானது.
விஜய்யின் இலக்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் உள்ளது. அதற்குள்ளாக தன் கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். இதற்காக திட்டமிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
சினிமா ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் என விஜய் பரபரப்பாக சுழன்று வந்தாலும் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களில் விஜய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே லியோ பட பாடலில் சிகரெட் பிடித்தபடி நடனம், தகாத வார்த்தை பேசியது என்று அவர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பிய நிலையில் இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அடுத்து ஒரு பெரிய பூகம்பமே தாக்கியுள்ளது விஜய்யின் இமேஜ் மீது. இது அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரிய இடியாய் விழுந்துள்ளது.
ஆமாங்க அதுதான் விஜய்யின் 50 வது பிறந்த நாளுக்கு திரிஷா வாழ்த்து கூறியதும் அவர் புகைப்படங்கள் பதிவிட்டதும் தான் இந்த சர்ச்சை தீயாய் பரவி வருகிறது. அதில், அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்குப் பின் அமைதியாகவும்..இதைத்தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
திரிசா விஜயுடன் லிஃப்டில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை போஸ்ட் செய்திருந்தார். இது இணையதளத்தில் வைரலானது.
இதுகுறித்து தான் தற்போது நெட்டிசன் கள் பேசி வருகிறார்கள். அதாவது திரிஷா நடிகர் விஜயுடன் காதலில் இருக்கிறார் என்று…..ஆனால் உறுதிப்படுத்தப்படாத இந்த தகவலால் விஜயின் ரசிகர்களும் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஏற்கனவே விஜய்க்கு சங்கீதா என்ற மனையும் 2 பிள்ளைகளும் உள்ள நிலையில் அவருடன் நடித்த எல்லா நடிகைகளும் அவருடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போதிலும், திரிஷா விஜயுடன் எடுத்துக் கொண்டபுகைப்படம் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது?
அதற்கான காரணங்கள் கடந்த 22 ஆம் தேதி விஜய்க்கு வாச்ழ்த்து கூறிய திரிஷா இன்ஸ்டாவில் ஒரு ஆங்கில காதல் பாடல் ஒலிக்கபட்டு நீதான் என் காதல், என் உயிர் உள்ளவரை நீதான் என்று குறிப்பிடும் படி இருந்தது…
அதேபோல் திரிஷாவில் பழைய புகைப்படங்களையும் பகிர்ந்து, பலவேறு கால கட்டங்களில் விஜய் பயணிக்கையில் அவர் அணிந்திருந்த வெள்ளை ஷூவை அதே மாடலை திரிஷாவுடன் இருக்கும் காலுடன் ஒப்பிட்டு பதிவிட்டனர்.
வெளி நாடுகள் உள்ளிட்ட சில இடங்களுக்கு திரிஷா பயணிக்கையில் அவருடன் விஜய் இருந்த போட்டோக்களும் அவர்களுக்கு உறுத்தி இருக்கலாம்! இது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தங்கள் காதலை உலகிற்கு மெல்ல அறிமுகம் செய்வது போல் திரிஷாவும் தன் காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறாரோ என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், விஜய் ரூ.25 கோடியில் சென்னையில் ஒருபிரமாண்ட அலுலகத்தை வாங்கியிருக்கிறாராம். அந்த அலுவலகம் இருக்கும் ஒரே அப்பார்ட்மெண்டில்தான் ரூ.17 கோடிக்கு வாங்கிய திரிசாவின் வீடும் இருக்கிறதாம். அங்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் குடிபோனதாகவும், விஜய் தன் அலுவலகத்திற்கு வந்தபோது, திரிஷாவும் அவரும் ஒரே லிப்டில் சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அந்த லிப்டில் திரிஷாவும், விஜய்யும் இணைந்து எடுத்ஹ செல்பி என்று கூறப்படுகிறது.உடனே எல்லோரும் கண், காது மூக்கு வைத்து பேசுகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
ஆனால் விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் அவருக்கு எதிரான பலர் இந்த விசயத்தைத் திரிந்து விட்டிருக்கிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.
ஏற்கனவே தமிழ் நாட்டில் கருணா நிதி, ஜெயலலிதா,விஜயகாந்த், சரத்குமார் ,கமல்ஹாசன், பாக்யராஜ், டி. ராஜேந்தர், சீமான், உதயநிதி இந்த வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியல் குதித்துள்ளார். அவர் எந்தளவு சினிமாவில் பிரபலமோ அதை மட்டும் அரசியலுக்கான தகுதியாக அவர் எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் அப்படி நினைத்து வந்தவர்களில் சிலர் அரசியலில் எடுபடாமல் போயிருப்பதை மக்கள் உணர்வர்.
சமீபத்தில் முதல்வர் தன் காரில் செல்லும்போது சாலோயோரத்தில் ஒருவர் நிற்பதைப் பார்த்து,அவரது கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்டார். ஆனால் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியைக் கூட திறந்து பார்க்கவில்லை என விஜய் மீது நெட்டிசன்கள் விமர்சனம் முன்வைத்தனர்.
எனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூகப்பணிகள் செய்து,அதை தற்போது அரசியல் இயக்கமாக மாற்றியுள்ள அவர் இனி சர்ச்சையில் சிக்காமல் மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனிவரும் காலத்தில் ஒரு தலைவராக எப்படி பரிமளிப்பார் என்பதைக் காண மக்களும் அரசியல் விமர்சகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
’’ த்ரிஷா விவகாரம்….விஜய்யின் அரசியல் வாழ்க்கை என்னாகும்?’’
By Sinojkiyan
Cinema
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment