திருமயம் அருகே நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குனர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஆகியோர் ராராபுரத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு செய்து அரசுபள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பிரபல நடிகரான அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனரும்,நகைச்சுவை நடிகராமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தம்பி ராமையாவின் சொந்த ஊரான திருமயம் அருகே உள்ள ராராபுரத்தில் அவரது குலதெய்வமான திருவேட்டழகர் கோவிலுக்கு சென்ற புதுமணத்தம்பதிகள் அங்கு வழிபாடு செய்தனர்.தொடர்ந்து ராராபுரம் அரசுபள்ளிக்கு சென்ற உமாபதி-ஐஸ்வர்யா தம்பதியினர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பேக்,தண்ணீர் பாட்டில்,பேஸ்ட்,பிரஷ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.பள்ளி மாணவ மாணவிகள் புதுமணத்தம்பதியினருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அர்ஜுன் மகள், மறுமகன்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு
Keep Reading
Add A Comment