விஜய் நல்லது செய்வதால் பாராட்டுகிறோம் கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை; நாங்கள் விஜய் உடன் கூட்டணிக்காக ஏங்கவில்லை-அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி*
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வட சென்னைக்கு உட்பட்ட ராயபுரம் டி.எச் சாலை, மகப்பேறு மருத்துவமனை அருகே விலையில்லா தேநீர் வழங்கும் பந்தலை இன்று திறந்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக அரசியல் கட்சி மக்களுக்காக விலையில்லா தேநீர், டீ மாலையில் வழங்கும் கடை திறக்கப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் அன்பு தம்பி விஜய்க்கு அன்பு நல்வாழ்த்துக்கள்.
திரைப்பட துறையில் மட்டும் அல்ல மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். மக்கள் பாதிக்கப்படும் போது நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும். விஜய் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்தது பாராட்டத்தக்கது. நான் ஓடி ஒளியவில்லை என சொல்லும் முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை. உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளார். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஏன் ராஜினாமா செய்யவில்லை.
மடியில் கனமில்லை என்றால் ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணம் மட்டும் கொடுக்காமல் துணி கூட துவைத்து குடுப்பார்கள். நல்லது செய்தால் நாங்கள் பாராட்டுவோம். விஜய் நல்லது செய்வதால் பாராட்டுவோம்.
கூட்டணிக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் விஜய் உடன் கூட்டணிக்காக ஏங்கவில்லை. அண்ணாமலை 10 கட்சிகளை சேர்த்து வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தனியாக போட்டியிட்டால் 2 முதல் 3 சதவீதம் வாக்குகள் பெறும் என்றார்.
விஜய் உடன் கூட்டணிக்காக ஏங்கவில்லை- ஜெயக்குமார்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகள்ளச்சாராயம் எப்படி விஷச்சாராயமாக மாறுகிறது?? சினோஜ் கட்டுரைகள்
Keep Reading
Add A Comment