பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்படும் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் கேசவன் ஆகியோர் விசைத்தறி கூலித்தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்றைய தினம் திருச்செங்கோடு அடுத்துள்ள வேலாத்தா கோயில் பகுதியில் உள்ள தங்களது உறவினர்களை காண அவர்களது டி.வி.எஸ் எக்ஸெல் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் செல்ல வேண்டிய இடத்தை தாண்டி வந்ததால், இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல தங்களது இரு சக்கர வாகனத்தை திருப்பி சாலையை கடக்க முயன்றுள்ளனர். காடச்சநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று கொண்டு இருந்தால் பக்கவாட்டில் வந்த தனியார் பேருந்தினை கவனிக்காமல் சாலையின் மறுபுறம் கடக்க முயன்ற பொழுது திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அவர்கள் மீது மோதி இருவரும் இரண்டு சக்கர வாகனத்துடன் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணனின் வலது முன் கை துண்டானது. இதே போல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கேசவனுக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்தவர்களை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீ சப்படும் பதை பதைக்கும் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பேருந்து மோதி தூக்கி வீசப்படும் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleவிஜய் உடன் கூட்டணிக்காக ஏங்கவில்லை- ஜெயக்குமார்
Keep Reading
Add A Comment