சேலம் மாவட்டம் எடப்பாடி – பூலாம்பட்டி பிரதான சாலையில், மது போதையில் இருந்த நபர் நடுரோட்டில் கோணிப்பை விரித்து படுத்து உறங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி – பூலாம்பட்டி பிரதான சாலையில், ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அனல் மின் நிலைய ஊழியர் சங்கர், மது போதையில் நடு ரோட்டில் படுத்திருந்த நிலையில், அவ்வழியாக வந்த வாகனம் அவர் தலை மீது ஏறி இறங்கியதால், அவர் துடிதுடித்து உயிரிழந்த சி சி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு அன்று மாலை எடப்பாடி தாவாந்தெரு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி எடப்பாடி -பூலாம்பட்டி பிரதான சாலையில் நடந்து வந்தார், திடீரென அவர் பிரதான சாலையின் நடுவே கோணிப்பை விரிப்பு ஒன்றை விரித்து அதில் சாலையின் குறுக்கே நீண்டு படுத்தார். “யாராவது தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பாப்போம்” என்று தொடர்ந்து கூறியபடி நீண்ட நேரமாக சாலையின் குறுக்கே படுத்திருந்தார்.
மது போதையில் இருந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் அங்கிருந்து எழுந்து செல்லும்படி கூறிய போதும், அவர் யாரையும் பொறுப் படுத்தாமல் நீண்ட நேரமாக பிரதான சாலையின் குறுக்கே படுத்து இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இப்பகுதியில் அரசு மது கடை செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் மது போதையில் சுற்றித் திரியும் நபர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி இப்பகுதியில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை காவல்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்போது பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியால் பரபரப்பு…
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment