கள்ளச்சாராயம் எப்படி விஷச்சாராயமாக மாறுகிறது என்பதைப் பற்றி இதில் விளக்கமாக பார்ப்போம்!
பொதுவாக மது என அறியப்படும் எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. இந்த மதுபானத்தில் பியர்வகைகள், வைன் வகைகள், ஆகிய 3 வகைகள் உள்ளன.
ஆல்கஹால் இரண்டு அடிப்படை செயல்முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நொதித்தல் மற்றும் வடித்தல் ஆகும்.
நொதித்தல் என்பது ஒரு ரசாயன எதிர்வினை. அங்கு ஈஸ்ட் அல்லது பாக்டீரியாக்கள் சர்க்கரைகளுடன் தானியம், பழங்கள், கரும்பு போன்றவை வினைபுரிந்து எத்தனால் அதாவது பானத்தில் உள்ள ஆல்கஹால் உற்பத்தி ஆகிறது.
மதுபானம் அதன் ஆல்கஹால் உள்ளடக்கத்தால் 5%அளவு பீர் லிருந்து 12 % ஒயின் முதல் 40% காய்ச்சி வடிகட்டிய ஆவிகள் வரை வேறுபடுகிறது.
வடிகட்டுதல் முக்கியமானது, ஏனெனில் சர்க்கரையின் அதிக அளவு ஆல்கஹால் ஆக மாறுவதால் நிலைமைகள் நச்சுத் தன்மையடைகின்றன.
வடிகட்டுதல் என்பது ஆவியாதல் மற்றும் ஒடுக்கம் ஆகியவற்றைப் பொருத்து பொருத்து மீதமுள்ள கலவைல் இருந்து ஆல்கஹால் உடல் ரீதியாகப் பிரிக்கின்ற ஒரு செயல்முறை என்று கூறப்படுகிறது.
சரி, இந்த மதுபானம் என்பது குடித்தவுடன் உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவாது இயல்புதான்.
வேதாகமத்தில் மதுபானம் அருந்துவதைப் பற்றி பல அதிகாரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளாது. குறிப்பாக எபேசியர் 5.18 ல் கிறிஸ்தவர்கள் மது அருந்தி வெறி கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆனால் இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லை உலகில் பல பகுதிகளிலும் இந்த மதுபான புழக்கம் காணப்படுகிறது. அதனால் மக்களும் தாராளமாகவே இதை பருகி வருகின்றனர். சில இடங்களில் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது.
மனித ஆரோக்கியத்தில் எத்தனாலின் பாதகமான விளைவு: எத்தனால் (c2h5oh) கல்லீரலிலும் வயிற்றிலும் ஆல்கஹால் டீஹைட்ரோஜினேஸ் நொதிகள் அசிடால்டிஹைடாக வளர்ச்சிதை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்பின்னர், ஆல்டிஹைட் டீஹைட்ரஜனேஸ் என்சைம்கள் அசிடால்டிஹைடைஅசிட்டேட்டாக மாற்றுகிறது. ஆல்கஹால் உட்கொள்வதால் எதிர்மறையான விளைவுகள், ஹேங்கொவர் முதல் புற்று நோய் வரை வருவதற்கு இந்த அசிட்டால்டிஹைட் காரணம் என்று கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு என்பது எந்த அளவில் மது அருந்துவது என்பது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது அல்ல என்று கண்டறிந்துள்ளது.
ஆனால், மதுபானம் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இந்தக் கள்ளச் சாராயன் என்பது விசச்சாராயமாகவே கருதப்படுகிறது. இது உயிரைக் கொள்வதால்தால் விசச் சாராயம் என்று கூறுகின்றனர்.
முதலில் கூறியது மாதிரி ஆல்கஹால் வகைகளில் நமது ஊர்களில் விற்கப்படும் மதுபானத்தில் இருப்பது எத்தில் ஆல்கஹால், மதுபானத்தின் வகையைப் பொருத்து, அதில் கலக்கப்படும் ஆல்கஹாலின் சதவீதம் மாறுபடுகிறது. கள்ளச்சாராயம் விசச்சாராயமாக எப்படி மாறுகிறது??
இந்தக் கள்ளசாராயத்தை குடித்தததனால்தான் கள்ளக்குறிச்சியில் 55 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரண ஓலமும், உறவினர்களின் கதறலும் இன்னும் நம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரத்தில் அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மதுபானத்தின் வகையைப் பொருத்து அதில் கலக்கப்படும் எத்தில் ஆல்கஹாலின் சதவீதம் மாறும் என கூறப்படுகிறது. ஒரு மதுபானத்தில் ஆல்கஹால் குறிப்பிட்ட சதவீதம் என்றால் அத்தனை சதவீதம் எத்தில் ஆல்கஹால் கலக்கப்பட்டுள்ளது என்று என்று கூறப்படுகிறது.
வேறுவகை மதுபானத்திலும் எத்தனை சதவீதம் ஆல்கஹால் என்று கண்டுபிடித்தால் அதில் அத்தனை சதவீதம் ஆல்கஹால் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் என்றால் எத்தில் ஆல்கஹாலுக்குப்பதிலாக மெத்தனால் கலக்கப்படும். ஆனால் இந்த மெத்தனால் மனித உடலுக்குள் செல்லும்போது, உடலில் உள்ள நீருடன் சேர்ந்து அவை பார்மால்டிஹைடாக மாறும். அது என்ன பார்மால்டிஹைடு, உடல் உறுப்புகள் கெட்டுப்போகாமல் இருக்க உபயோகப்படுத்துவதுதான் இந்த பார்மால்டிஹைடு. இது உடலுக்குள் சென்றால், அங்குள்ள நீரை வெளியே எடுத்துவர உடலில் இருக்கும் செல்கள் மரிக்கும். எனவே விசமாக மாறி உயிர்கள் இறப்பதற்கு இதுதான் காரணம் என கூறப்படுகிறது. எத்தனால் இருக்கும்போது ஏன் மெத்தனால் சேர்க்கப்படுகிறது என்றால்..? போதை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். ஏற்கனவே மெத்தனால் விசத்தன்மை இருக்கும் என்பதால், ஒரு 10 மிலி மெத்தனால் பருகினால்கூட அது உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்த மெத்தனால் பாட்டிலில் குறிப்பிட்ட அளவு அதிகரிக்கும்போது அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும், அதன் இறுதி நிலைதான் உயிரிழப்பு. இந்த மெத்தனால் கலந்த ஆல்கஹால் பருகினால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல். அதன்பிறகு மற்ற உடல் பாகங்களும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்தும் கூட இதை ஏன் மக்கள் தேடிச் சென்று குடிக்கிறார்கள். அவர்களின் இறப்பிற்குச் சென்றவர்களும் கூட அதே கள்ளச்சாராயத்தைக் குடித்து பாதிப்பிற்குள்ளானார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கள்ளச்சாராயத்திற்கும், விசச் சாராயத்திற்கும் வித்தியாசம் உள்ளது. மதுவை அரசு அனுமதி இன்றி ,உரிமம் இன்றி காய்ச்சிக் குடித்தால் கள்ளச்சாராயம். அதில் போதைக்காக மெத்தனால் சேர்க்கும்போது விச சாராயமாகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனால்ல் 90% முதல் 100% வரை ஆல்கஹால் இருக்கும். மெத்தனாலை நீர்த்துப் போக செய்யாமல் அதை அப்படியே குடித்தால் சில நிமிடங்களில் மரணம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மெத்தனால் வயிற்றிற்குள் விசச் சாராயமாக செல்லும்போது அது உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தைச் சீர்குலைக்கும். சில நொடிகளில் வயிறு மற்றும் குடல் வெந்துவிடும் கொடியது என்றும் அதனால்தால் விச சாராயம் குடித்தவர்கள் நுரையாக வாந்தியெடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு என்ன நடவடிக்கை வேண்டும் என்றால் அரசு கள்ளச்சாராயத்தையும், விசச் சாராயத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த மெத்தனாலை மனிதர்களின் கையில் சிக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்கள் இயற்ற வேண்டும்.
இதையும் மீறி சில கள்ளச்சாராய வியாரிகள் வியாபர நோக்கத்திற்காகவும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றவும் கள்ளசாராயத்தை விற்க வேண்டி மெத்தனாலை எப்படியாவது அறிந்து அதைக் கைப்பற்றுவதும், அதைக் கொண்டு விசச்சாராயம் உற்பத்தி செய்வதும் இனியும் தொடரக் கூடாது.
குறிப்பாக மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் அதை வைத்திருப்போர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதை யார் கையிருப்பு வைத்திருக்கிறார்கள் என்கிற கணக்கும், புள்ளிவிவரங்களும் இருந்தால் நிச்சயம் கள்ளக்குறிச்சியில் நடந்த மாதிரி இனிமேல் நடக்காமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் எப்படி விஷச்சாராயமாக மாறுகிறது?? சினோஜ் கட்டுரைகள்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபரை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம்
Next Article விஜய் உடன் கூட்டணிக்காக ஏங்கவில்லை- ஜெயக்குமார்
Keep Reading
Add A Comment