கள்ளக்குறிச்சி சம்பவம் வருத்தமளிக்கிறது. நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் -என்று திருப்பூரில் திரைப்பட நடிகர் விதார்த் பேட்டியளித்துள்ளார்.
திரைப்பட நடிகர் விதார்த் நடிப்பில் லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு வாவிபாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் விதார்த் ரசிகர்களுடன் லாந்தர் படம் பார்த்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு விதார்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் திரில்லர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். முதற்கட்டமாக 100 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக திரையரங்குகளில் வெளியிடப்படும். தமிழகத்தில் நல்ல படங்களுக்கு இடையே எப்போதும் போட்டியிருக்கும்.
பொதுமக்கள் ஆதரவும் தெரிவிப்பார்கள்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்மளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். லாந்தர் படத்திலும் முதல் சீன் கள்ளச்சாராயம் தொடர்பாக இடம்பெற்று இருக்கிறது. பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். படத் தயாரிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் வருத்தமளிக்கிறது-நடிகர் விதார்த்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Article1000க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் யோகா.. .
Keep Reading
Add A Comment