கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபரை கிறிஸ்தவ முறைப்படி ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று சடங்குகள் செய்து அடக்கம் செய்த உறவினர்கள்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். 150 க்கு மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, புதுவை, சேலம் ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவிக்கும் சிகிச்சை பெற்று வந்த கல்யாணசுந்தரம் , மதன் ஆக இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த அனைவரும் கருணாபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டனர். சிலர் அடக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்த கல்யாணசுந்தரத்தின் உடலை கச்சிராயபாளையம் சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்யாணசுந்தரத்தின் உடல் வைக்கப்பட்டு பாதிரியார் முன்னிலையில் இறுதி பிரார்த்தனை செய்து அவரது உறவினர்கள் கிறிஸ்தவ முறைப்படி உடலை அடக்கம் செய்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபரை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleநடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் -சினோஜ் கட்டுரை
Keep Reading
Add A Comment