தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தனது 50 வயது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். விஜய்க்கு தமிழ்நாட்டைத் தாண்டி, பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி எஸ்.ஏ.சந்திரசேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் விஜய்.
இவர் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திராம் பள்ளியில் படிப்பை தொடங்கினார். அடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது படிப்பை நிறைவு செய்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை படித்துக் கொண்டிருக்கும்போதே, பாதியில் விட்டு தன் தந்தை வழியில் சினிமாவில் நுழைந்தார்.
நாளைய தீர்ப்பில் இருந்து தொடங்கிய அவரது பயணம் விஜய் 68 தி கோட் படம் வரை தொடர்கிறது.
தமிழ் சினிமாவில் நடனம், நடிப்பு, முக பாவனை, காமெடி , பாடல் என அனைத்துக் களத்திலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் விஜய்.
இவர் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த அவர் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிறார்.
அடுத்து விஜய்69 படம்தான் அவரது கடைசி படம் எனக் கூறப்படும் நிலையில், தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் கோலோட்சி வரும் நிலையில், அவர் மாற்றும் கட்சியினருடன் கூட்டணி வைப்பாரா? இல்லை தனித்து நின்று அரசியலில் ஜெயிப்பாரா?? என்பதை இனிவரும் காலங்களில் பார்க்கலாம்
#சினோஜ்
😊
23-06-24
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் -சினோஜ் கட்டுரை
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleசாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு கமல் ஆறுதல்
Keep Reading
Add A Comment