“தி கோட்” பட 2வது சிங்கில் புரோமோ நேற்று ரிலீசானது.
*
விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில்,உருவாகி வரும் படம் ‘’தி கோட்.’’ இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் 68 வது படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பிரசாந்த், லைலா, ஜெயராம், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக மீனாட்சிசவுத்ரி நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில்,இப்படத்தின் முதல் சிங்கில் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று ஜூன் 22 ஆம் தேதி மாலை 6மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகர் பவதாரணி இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து பாடல்வரிகள் எழுதியுள்ளார். ஏற்கனவே விசில் போடு பாடல் வெளியாகி வைரலான நிலையில், சின்ன சின்ன கண்கள் பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.