கேரளாவில் சாவ்வாரிக்கு பயன்படுத்தப்படும் யானை தாக்கியதில் யானை பாகன் உயிரிழந்த வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி 60-ஆம் மையில் என்ற இடத்தில் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சாவாரி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சம்பவத்தன்று பாகன் யானையின் அருகே சென்றபோது கோபமடைந்த யானை பாகன் பாலகிருஷ்ணனை தனது காலால் மிதித்தும் தும்பிக்கையால் தூக்கியும் வீசியது.
இதனிடையே மற்றொரு பாகன் யானையை கட்டுப்படுத்த முயன்றபோது ஆக்ரோஷமடைந்த யானை அவரையும் தாக்க முயற்ப்பட்டது. எனினும் அவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்
இதற்கிடையே இச்சம்பவத்தின் போது சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு யானை சவாரி செய்ய வரவில்லை என்பதால் பெரும் அசாம்பவித சம்பவங்களும் தவிர்க்கப்பட்டது.