புதுக்கோட்டை
திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் பாஜக குறித்தும் பாஜக நிர்வாகிகள் குறித்தும் யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் செய்தியை வெளியிட்டு வருகிறார் இதே நிலை தொடர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்…. புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் செய்தியாளரிடம் கூறியதாவது
மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற இலுப்பூர் கோட்டாட்சியர் மணல் கடத்தல் கும்பலால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது கண்டனத்துக்குரியது
இந்த சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்
மக்களுக்காக பணியாற்றுகின்ற அரசு அதிகாரிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நடைபெற்று வருகிறது.
சட்டத்துறை அமைச்சர் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்தவராக உள்ளார் இருப்பினும் அவரது மாவட்டத்திலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது
மாவட்டத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது கஞ்சா பழக்கம் போதை ஊசி ஆகியவற்றால் இளம் வயதினர்U பாதிக்கப்பட்டுள்ளனர்
ஆளுங்கட்சியில் இருப்பவர்களை இதற்கு துணை புரிகின்றனர்
இந்த சம்பவங்களை உண்மையான எதிர்க்கட்சியாக இருந்து பாஜக தான் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தலைமையின் கீழ் அவரது முயற்சியால் தமிழகத்தில் இன்று பாஜக 11 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது
பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது
இதன் காரணமாக 2026 தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை கீழ் பாஜக ஆட்சி அமையும்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் தமிழக அரசு இது சரியாக செயல்படுத்தவில்லை முறையாக கண்காணிக்கவில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும்
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் தமிழகத்தில் அவரது சொல்படி தான் ஆட்சி நடக்கிறது என்பதற்கு உதாரணம் தான் மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய போது இலுப்பூர் கோட்டாட்சியர் கொலை முயற்சி நடத்தப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி நான் பதவியேற்ற இரண்டு மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும் மணல் கடத்தலில் ஈடுபடலாம் என்று நேரடியாகவே கூறினார் அது தற்போது நடைபெற்று வருகிறது
பிரபல இயக்குனர் பாண்டி ராஜனுக்கும் பாஜக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் இடையே தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளதை இயக்குனர் பாண்டியராஜன் திசை திருப்பி யூடியூப் சேனல் ஒன்றில் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி குறித்தும் பாஜக கட்சி குறித்தும் தனிப்பட்ட முறையில் என்னை பற்றியும் இயக்குனர் பாண்டிராஜன் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார் பாஜக என்றைக்குமே குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்காது அவருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சனை இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர் மீது வழக்கு தொடுக்கலாம் அதை வஎன்றார் ஒட்டுமொத்தமாக பாஜக குறித்தும் என் மீதும் அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது இதே நிலை தொடர்ந்தால் அவர் மீது சட்டப் பணியான நடவடிக்கை எடுப்பதோடு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.
பேட்டி:
விஜயகுமார் மாவட்ட தலைவர் பாஜக
பாண்டியராஜன் பாஜக குறித்து அவதூறு பரப்பி வருகிறார் – புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் பேட்டி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதேசிய தகுதித் தேர்வில் (NET) முறைகேடு – தேர்வு ரத்து
Keep Reading
Add A Comment