கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நாடுகானி சுரம் ( nadukani churam ) பகுதி வழியாக சுற்றுலா வந்த காரை காட்டு யானை தாக்கிய காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் பகுதியிலிருந்து ஒரு குடும்பம் சுற்றுலா செல்வதற்காக நேற்று இரவு நடுகானி சுரம் வழியாக சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த குட்டி யானைகளுடன் வந்த காட்டு யானை திடீரென காரில் மோதியது .ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.இதனை அந்த வழியாக சென்றவர்கள் படம் பிடித்துள்ளனர். அதில் காட்டு யானை காரை கவிழ்க்க முயற்சிப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன.
இந்த சாலையில் யானைகள் சாலை கடந்து காட்டுக்கு செல்வது வழக்கம் எனவும் ஆனால் இது வரை இது போல் வாகனங்களை தாக்கியது கிடையாது என கூறப்படுகிறது.