விருதுநகரில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மனைவி ராதிகாவின் வெற்றிக்காக ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சனம் செய்தார் நடிகர் சரத்குமார்.
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி 6மணியுடன் 7 கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலுக்காக வாக்குகள் வரும் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் தமிழக பாஜக கூட்டணியில் விருது நகர் தொகுதியில் நடிகர் சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதேதொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இது ஸ்டார் தொகுதி என்பதால் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விருதுநகரில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மனைவி ராதிகாவின் வெற்றிக்காக ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சனம் செய்தார் நடிகர் சரத்குமார்.
இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
விருதுநகரில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மனைவி ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் அங்கட்பிரதட்சணம்.
18வது மக்களவைத் தேர்தலுக்காக வாக்குகள் வரும் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.