பெண் யானையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் 3 நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டு பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது யானை உடலில் முன்னேற்றம் காணப்பட்டது.மேலும் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கியதாக மருத்துவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து யானை கண்காணிப்பதற்காக வனப்பகுதியில் யானைக்க அருகே இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் யானைக்கு மாம்பழம் மற்றும் கேழ்வரகு மாவில் மருந்துகள் கலந்து வைக்கப்பட்டது.
நான்கு மாத குட்டி யானை தனது அண்ணன் யானையுடன் வனத்துக்குள் சென்றதால் 5 குழு அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இரவுக்குள் குட்டி யானை தன் தாயிடம் பால் குடிக்க வரும் என மருத்துவர் கூறினார்.
பெண் யானையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள்….
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Keep Reading
Add A Comment