கடலூரில் “கருடன்” படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அண்ணா பாலம் அருகே
திரையரங்கு ஒன்று உள்ளது.அந்த திரையரங்கில் நடிகர்கள் சூரி,சசிக்குமார் நடித்த கருடன் படம் பார்க்க 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்துள்ளனர்.அப்போது அவர்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.இதனை தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து பலமுறை கேட்டும் திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த போது காவலர்கள் அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.தற்பொழுது கோட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் காத்துள்ளனர்.கடலூரில் நரிக்குறவர்கள் திரையரங்கில் அனுமதிக்க படாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.