தூத்துக்குடி எம்.சவேரியார் புரத்தில் பழைய இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள செம்பு, பித்தளை பொருட்கள் கொள்ளை.
தூத்துக்குடி முள்ளக்காடு எம்.சவேரியார்புரத்தில் இரும்பு கடை நடத்தி வருபவர் தூத்துக்குடி முள்ளக்காடு ராஜுவ் நகர் 3வது தெருவை சார்ந்த சுடலை மணி மகன் வேல்ராஜ், இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், இன்று காலை 9 மணிக்கு கடையை திறக்க வந்த போது இரும்பு கடையின் முன்பக்கத்தில் உள்ள தகரக் கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த 20 கிலோ செம்பு பொருள்கள் மற்றும் 20 கிலோ பித்தளை பொருட்கள் என மொத்தம் 23 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.