“பரஸ்பர மரியாதையை பேணி வருகிறோம்” – பாலகிருஷ்ணா குறித்து நடிகை அஞ்சலி
“பாலகிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை எப்போதும் பேணி வருகிறோம்” என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ பட நிகழ்வின்போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ வைரலானதை தொடர்ந்து நடிகை அஞ்சலியின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில், “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணாவும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை எப்போதும் பேணி வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.