நடிகர் சூரி நடித்து வெளியான கருடன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தலைமை நற்பணி மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி மேளதாளத்துடன் கொண்டாட்டம்.
முன்னணி நடிகர்கள் பிரபல நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் பொழுது அவர்களது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பாலபிஷேகம், சில சமயங்களில் பீர் அபிஷேங்கள் அன்னதானம் வழங்கி கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் காமெடி நடிகராக இருந்து நடிகராக முன்னேறி உள்ள நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. அதேபோன்று புதுச்சேரியில் ஐந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதனையொட்டி கருடன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து புதுச்சேரி சூரி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன்படி.
சூரி கட் அவுட்டிற்கு மாலைகள் அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு ஐந்து வகையான சாதம் என அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
புதுவை மாநில நடிகர் சூரி தலைமை நற்பணி இயக்கம் சார்பாக புதுவை மாநில தலைவர் தன்ராஜ் செயலாளர் சந்தோஷ்
மற்றும் மான்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நடிகர் சூரி நடித்து வெளியான கருடன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Next Article பெண் யானையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள்….
Keep Reading
Add A Comment