இரண்டு கிலோமீட்டர் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.
போலீசார் தடுத்தும் ஹெல்மெட்டாலும் கைகளாலும் மாறி மாறி தாக்கியதால் பெரும் பரபரப்பு
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலநாதன்.இவர் தனது தோழியுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இன்று மாலை பாண்டி மெரினாவில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். புல் போதையில் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் உப்பளம் வழியாக கடலூர் சாலை மரப்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது காரானது கட்டுப்பாட்டை இழந்து 10 க்கும் மேற்பட்ட கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளார். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் அவரை இருசக்கர வாகனத்தின் மூலம் துரத்தி உள்ளனர். அவ்வாறு துரத்தி வந்தவர்கள் இந்திராகாந்தி சதுக்கம் அருகே காரை வழிமறித்து காரில் உள்ளே இருந்த கமலநாதனை தாக்கினர்.சிலர் காரை கற்களைக்கொண்டு சேதப்படுத்தினர்.
நிலைமையை உணர்ந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் கமலநாதனை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றினர் ஆனாலும் பொதுமக்கள் விடாமல் அவரை ஹெல்மெட்டாலும் கைகளாலும் மாறி மாறி தாக்கினர் இதனை எடுத்து ஒரு வழியாக அவர்களை மீட்ட போலீசார் ஆட்டோ மூலம் கிழக்கு போக்குவரத்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் தனது தோழியுடன் காரில் வந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவரை மடக்கி தர்ம அடி கொடுத்ததால் இந்திராகாந்தி சதுக்கம் அருகே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தனது தோழியுடன் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி 10 பேரை காயப்படுத்திய போதை ஆசாமி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
Keep Reading
Add A Comment