திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதியில் திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருநெல்வேலி டவுன் வடகரை வீதி என்பது மிகவும் முக்கியமான வர்த்தக பகுதியாக இருந்து வருகிறது வணிக நிறுவனங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் இந்த பகுதியில் மாரியப்பன் என்பவர் சமோசா கடை ஒன்றே நடத்தி வருகிறார் இந்த கடையில் திடீரென எரிவாயு சிலிண்டர் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ பற்றி திடீரென வெடித்து சிதறியது எனினும் ஊழியர்கள் அங்கு இருந்தவர்கள் லேசான காயங்களோடு தப்பினர் தொடர்ந்து அப்பகுதி புகை மண்டலமாக மாறிய நிலையில் சுதாரித்துக்கொண்ட அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர் எனினும் விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய நிலையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது