*பிரபல திரைப்பட இயக்குனரும் தீவிர பாதாள செம்பு முருகன் பக்தருமான இயக்குனர் வசந்த் மனைவியுடன் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்*
ரிதம், ஆசை, நேருக்கு நேர், கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்த் எஸ் சாய் மனைவி சம்யுக்தா உடன்
இன்று திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்து முன்னதாக காவல் தெய்வமான சங்கிலி கருப்புவை வழிபட்டு 8 கருங்காலி மாலைகளை பாதாள செம்பு முருகனுக்கு அணிவித்து சாமி தரிசனம் செய்தார்.
ஆருத்ரா ஆர்ட்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் சிருஷ்டி வழங்கும்
குமார் சீதாராமன்
ஆதர்ஷ் குமார் தயாரிப்பில்
புதிய படத்தை இயக்குனர் வசந்த் இயக்க உள்ளார்.
அதற்க்காக பாதாள செம்பு முருகன் கோவிலில் முருகனின் ஆசி பெற்று சென்றார்.
கோவில் நிர்வாகம் சார்பாக இயக்குனர் வசந்த்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இயக்குனர் வசந்த் உடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் வசந்த் பாதாள செம்பு முருகன் கோவிலுக்காக 8 பாடல்கள் எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர்கள் சத்யா மற்றும் சீனிவாசஸ் இசையில் பிரபல பாடகர்களான மனோ, ஷான் ரோல்டன், சைந்தவி, வேல்முருகன், கில்மிசா , சரண்யா சீனிவாஸ், சபிதா சாய், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகியோர் பாடிய பாடல்கள் ஜுன் மாதம் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*
இயக்குனர் வசந்த்தின் படங்களைப் பார்க்கிற எல்லோருக்குமே அந்தப் படங்களின் காட்சி அமைப்பை பாடல் காட்சிகளை பார்க்கிற போது அதற்குள் இயக்குனர் என்பதையும் தாண்டி, இலக்கிய ரசனைமிக்க ஒரு கலைஞனைப் பார்த்திருப்பார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
இயக்குனர் வசந்த்-ன் புதிய படம்….
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதனது தாய் தந்தையுடன் நடிகர் விஜய்
Next Article தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்
Keep Reading
Add A Comment