
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறை காற்றுடன் கூடிய பெய்த கனமழை!!
சூறைக்காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி”!
தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை கடந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று (அக்னி நட்சத்திரம்) கத்தரி வெயில் தொடங்கப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை. பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதூர், செட்டியப்பனூர், நியூடவுன், பெரியபேட்டை, மேட்டுப்பாளையம், உதயேந்திரம் கொடையாஞ்சி, அம்பலூர் , திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைகாற்றுடன் கூடிய கன மழை பெய்தது . இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .
மேலும் வாணியம்பாடி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்