Pudhucherry

தமிழ் பாரம்பரிய படி குத்துவிளக்கு ஏற்றுவோம் என்று கூறி சிகரெட் லைட்டால் குத்து விளக்கு ஏற்றிய ம.க.பா.ஆனந்த்.
*இணையத்தில் வைரலாகும் வீடியோ*
புதுச்சேரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு பொழுதுபோக்கிற்காக நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பொழுதுபோக்கு ஒரு நாள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி துத்திப்பட்டு சி.ஏ.பி. சீக்கெம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான ம.க.பா. ஆனந்த், தங்கதுரை, புகழ் மற்றும் பிரபலமான யூடியூப்பர்ஸ் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் துவக்க விழாவில் தமிழ் பாரம்பரிய படி குத்து விளக்கு ஏற்றுவோம் என்று கூறி…
மெழுகுவர்த்தி இல்லாமல் சிகரெட் லைட்டால் குத்துவிளக்கை ம.க.பா.ஆனந்து
ஏற்றினார் இதனைத்தொடர்ந்து சமூக வலைதள பிரபலங்கள் அனைவரும் சிகரெட் லைட்டால் குத்துவிளக்கை ஏற்றினார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உள்ள பிரபலங்கள் ஒரு விஷயத்தை செய்யும் போது அது மிகவும் பிரபலமடையும், மேலும் சமூகத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும் எனவே இது போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.