கோவை

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு உடல் பரிசோதனை முடித்துவிட்டு போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது கோவை நீதிமன்றம் முன்பு சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனத்தை மறித்து திமுக மகளிரணியினர் செருப்புகள் உடன் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி காவல்துறையினர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர்.
சவுக்கு சங்கர் கோவை ஜெஎம்எண் 1 நீதிமன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கூடாது என பெண் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.