
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர் மே 1 ஆம் தேதி தனது 53 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.
ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்குமார். இவர் தற்போது, மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அவருடன் இணைந்து, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் விடாமுயற்சி படம் துருவாகி வருகிறது.
இப்படத்தை அடுத்து, மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது.இன்று அஜித் தனது 53 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமாத்துறையினர் அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், குழந்தை நட்சத்திரமாகசினிமாவில் அறிமுகமாகி, விஜய்யின் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் ஹீரோயினாக அறிமுகமான ஷாலினி , அஜித் இருவரும் அமர்க்கலம் படத்தில் ஒன்றாக நடித்தனர்.

அப்போது இருவரும் காதலித்த நிலையில்,இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு ஷாலினி பிறந்த நாள் பரிசாக டுகாட்டி வகை பைக்கை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.