
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். அப்போதே இப்படம் பெரிய ஹிட் அடித்து வசூல் குவித்த நிலையில், சமீபத்தில் கில்லி ரீ ரிலீஸாகி ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், கில்லி படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காசி திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த கில்லி பட பேனரை கிழித்த விவகாரத்தில் ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கில்லி பட பேனரை கிழித்த விவகாரத்தில் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 2பிரிவுகளில் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.