சரித்திர பதிவேடு குற்றவாளி ஒடஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவைவெட்டி சேர்ந்தவர் சேர்ந்தவர் ரவுடி சரத்குமார்(28). சரித்திர பதிவேடு குற்றவாளியான சரத், இன்று மதியம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார் .
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதில் சுதாரித்துக் கொண்ட சரத் அங்கிருந்து அங்கிருந்து தப்பி ஓடிய போது, அந்த கும்பல் விடாது துரத்திச் சென்று ரவுடி சரத்தை ஓட ஓட பட்டாக்கத்தியால் தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
பட்டப்பகலில் கூட்ட நெரிசல் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் தகவல் அறிந்து அங்கு வந்த ராஜமங்கலம் போலீஸார் சரத் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.