கோவை மாவட்டம், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை சுமார் 500 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடந்து வருகிறது.
மேம்பாலம் இறுதி கட்ட பணிகளின் ஒரு அம்சமாக பாலத்தை இணைக்கும் தூண்களுக்கு இடையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது. இதனை பார்வையிடும் போது இரண்டு தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியின் பரப்பு சுமார் 3500 சதுர அடி உள்ளது. 3 அடி ஆழம் 3 அடி விட்டத்தில் உள்ள சிமெண்ட் குழாய்கள் மழை நீர் சேகரிப்பிற்காக அமைக்கப்பட்டுவருகிறது. இக்குழாய்கள் முழுவதுமாக நிலத்திற்குள் பதிக்கப்படவில்லை. சாலையின் மேல் தூண்களுக்கு இடைப்பட்ட தடுப்புசுவர் பகுதியில் மண்னை நிரப்பி அதில் குழாய்களை பதித்துள்ளனர். பழைய தார்சாலை அப்படியே இருக்கும் நிலையில் நிலத்திற்கு கீழ் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குழாய் பதித்துள்ளனர். சேகரிக்கும் மழைத்தண்ணீர் எப்படி நிலத்தினுள் ஊடுருவி செல்லும்?
காந்திபுரம் பாலத்திற்கு கீழ அமைந்துள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் இதை போன்றே உள்ளது. இந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் ஒரு சில நிமிடம் பெய்யும் மழை நீரை கூட சேமிக்க முடியாது. கோவையில் சராசரி மழையின் அளவு 650 மில்லி மீட்டர். இரண்டு தூண்களுக்குள்ள இடையில் பரப்பளவு சுமார் 3500 சதுர அடி என்றால் ஆண்டுக்கு 2 லட்சத்து 75ஆயிரம் லிட்டர் கிடைக்கும். ஒரு உழவு மழை கிடைத்தாலே 8125 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இந்த 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானத்திற்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர் கட்டுமானத்துக்கு தேவைப்பட்டிருக்கும். இந்த கட்டுமானத்திற்கு 3 அடி ஆழம் 3 அடி விட்டத்தில் உள்ள சிமெண்ட் குழாயில் 600 லிட்டர் தண்ணீர் மட்டுமே சேமிக்க முடியும். 600 லிட்டர் தண்ணீர் சேகரிக்கும் அளவுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தால் போதுமா ?
500 கோடி ரூபாய் மதிப்புள்ள பணியிலே பூமிக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை செய்யாமல் சம்பிரதாயத்துக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்க இயலாது..!!
*கோவை நலன் சார்ந்த பலரின் வேண்டுகோள்*
*கோவையில் 500 கோடி மேம்பால பணியில் சம்பிரதாயத்திற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு..!!*
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleபுத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்- முதல்வர் மு. க. ஸ்டாலின்
Next Article தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணம்
Keep Reading
Add A Comment