கோவ மா வாட்டம் மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் – ஜோமேட்டோ(Zomato) என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன டீசர்ட் அணிந்த நபரும், அவரது தோழி ஆகிய இருவரும் ஹெல்மெட் திருடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மரக்கடை அடுத்த ஜமந்தார் வீதியில் கடந்த 17 ஆம் தேதிஎன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் டீசர்ட் அணிந்த நபரும் அவரது தோழியும் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
காலில் மிதிச்சு கேரட்டை இப்படி சுத்தம் பண்றாங்க? வைரல் வீடியோ
அப்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை அவர்கள் இருவரும் திருடினர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இச்சம்பவம் பற்றி வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் அந்த ஹெல்மெட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதில், ’’தன் ஹெல்மெட்டின் விலை ரூ.1500 என்று சிசிடிவி பதிவுகளை வைத்துப் புகார் அளித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மற்றும் அவரது தோழி இருவரும் ஹெல்மெட்டை திருடிச் செல்லும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் தொகுதியின் சிறப்புகள்!-சினோஜ் கட்டுரைகள்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இனிமேல் விலை உயர்ந்த ஹெல்மெட்டை வண்டி லாக்கரில் வைத்துப் பூட்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் கையொடு எடுத்துச் செல்ல வேண்டும். எப்போதும் கவனக்குறைவாக இருக்ககூடாது என எச்சரித்து வருகின்றனர்.