
மேற்குத் தொடர்ச்சிமலையின் இடுப்பில் அமர்ந்துள்ள ஊட்டி மற்றும் வால்பாறைக்கு அருகில் உள்ளதாலும், இயற்கையெழில் கொஞ்சும் கேரளாவுக்குப் பக்கத்தில் உள்ளதாலும் எப்போதும் குளுமையான சீதோஷ்ணம் நிலவிவருகிற ஒரு இடம்தான் நம்ம கோயம்புத்தூர் என்றழைக்கப்படுகிற கோவை.
கோவை ஒரு மாவட்டத்திற்கேற்க அனைத்து அம்சங்களும் பொருந்தியுள்ளன. குறிப்பாக சென்னைக்கு அடுத்தும், பலவித ஐடி நிறுவனங்களும், முன்னணி தொழில் நிறுவனங்களும், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் குவிந்துள்ளதால், தொழில் முனைவோர் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு எதிர்பார்த்திருப்போர், வேலைவாய்ப்பைத்தேடிக் கொண்டிருப்போர் என அனைவருக்கும் ஏற்றதொழில் வாசஸ்தலமாக இந்தக் கோவை உள்ளது.
அப்பாடா…. ஒருவழியாக தங்கம் விலை குறைவு… எவ்வளவு குறைந்தது தெரியுமா?
எதுவுமே கண்ணாரக் கண்டும், காதாரக் கேட்டும் அனுபவத்தால் உணர்ந்தும்தான் சொல்லவேண்டும் என்று கூறுவர் பெரியோர். அந்த வகையில், கோவன் புத்தூர் என்ற தலைவர் முன்பு இங்கு வசித்து வந்ததாகவும், அவர் காலத்தில் நொய்யல் நதி சிறப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஊருக்குத் தலைவனாக இருந்த நிலையில் அவரது பெயரிலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்பு காலப்போக்கில் அப்பெயர் மருவி கோயம்புத்தூர் என்றாகி, தற்போது பேச்சு வழக்கில் அது கோயமுத்தூர் என்றும் அதுவும் இன்றைய ’2 கே கிட்ஸ்’ மாதிரிஎதுவும் சுருங்கமாகச் சொல்லுவதுபோல் கோவை என்றாகிவிட்டது.
மதியிருக்க, விதிகள் நம்மை என்ன செய்யும்? சினோஜ் கட்டுரைகள்
எது எப்படியோ, கோவைப்பழம் எப்படி சிவப்பாகவும் சாப்பிடச் சுவையாகவும் இருக்குமோ அதுமாதிரி இந்தக் கோயம்புத்தூரில் வாழ்வதும் வசிப்பதும் கோடிச்சுகமளிக்கிறது என்று இங்கிருப்போர் உணர்ந்திருப்பர்.
தெற்கே பல்லட்டம் அருகேயுள்ள சூலூரிலிருந்து, சுல்தான்பேட்டை, அய்யம்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தறி, நெசவுத் தொழில் பிரதானமாகக் கருதப்படுகிறது. அதேபோல், மருதமலை, ஈச்சனாரி, வடவள்ளி, பெரியநாய்க்கன் பாளையம், மலுமிச்சம்பட்டி, போத்தனூர் சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் லேத் மற்றும் பம்புமெஷின், ஆழ்துளை கிணறு மோட்டார், தண்ணீர் மோட்டார், கிரைண்டர், மிக்சி, உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளும், இயந்திரங்களும் இங்கு அதிகளவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தரமும் உழைப்பும் போற்றப்படுகிறது. வியந்து பார்க்கப்படுகிறது.
தொழில்நிறுவனங்கள் அதிகமுள்ள கோயம்புத்தூர்தான் தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின் போதும், கோவைத் தொகுதி எப்போதும் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.
இங்குள்ள மக்களும் எப்போதும் உஷாரான மன நிலையில்தான் இருப்பர். தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்றிருப்பதால் அவர்களால் தொழில் வளருவது மட்டுமன்று, நல்ல தமிழ்ப்பண்பாடும், உறவுகளுக்கு மரியாதை சொல்லி அழைக்கும் பண்பும், தமிழ்க்கலாச்சாரமாகவே வளர்க்கப்படுகிறது. அத்துடன் வள்ளிக்கும்மி பாடல், நடனம் தனிச் சிறப்புபெருகிறது.
சேலத்தில் மாடர்ன் ஸ்டுடியோ இருந்தது மாதிரி சில ஆண்டுகளுக்கு முன்புவரை கோவையில் சினிமா படக் கம்பெனி இருந்தது. இன்றும் அதன் நினைவாக
ஸ்டுடியோ ஸ்டாப் ராம நாதபுரம் அருகிலுள்ளது.
இன்று எல்லாமே சென்னைக்கு மாறியிருந்தாலும் மியூசிக்கல் ஸ்டுடியோ, கல்யாண், மியூசிக் சோன், மியூசிக் பேரடைஸ் உள்ளிட்ட இசைக்கருவிகள் விற்பனை மையமும், மாயாஸ்டுடியோ, 7ஸ்டுடியோ போன்ற இசைக்கூடங்களும் உள்ளன.
கேஜி, கங்கா, யமுனா காவேரி போன்ற தியேட்டர்களும், கேஜி மருத்துவமனைகளும், கே.எம்.சி.ஹெச். கங்கா, பிஎஸ்ஜி ஹாஸ்பிட்டல், முத்து,ராயல்கேர் உள்ளிட்ட மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகின்றன.
கோடையில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஒரு பெரு நகரத்திற்கான சிறப்பு இன்னும் ஏன் இல்லையென்றால், ஹார்பர் மட்டும் இல்லாத ஒருகுறைதான். மற்றபடி, பெருநகரமான சென்னைக்கு
அடுத்த இடத்தில் எல்லா ஆட்சியாளர்களும் எல்லா கட்சியினரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் ஒரு மாவட்டம் கோவைதான்.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், போன்ற பிரபல கல்வி நிறுவனங்களும், பிஎஸ்ஜி, ரத்னம் காலேஜ், இந்துஸ்தான், தமிழ்நாடுவேளாண் பல்கலை. தமிழ் நாடு எஞ்ஜினியரின், பார்க் என்ஜினியரிங், நிர்மலா கல்லூரி உள்ளிட்ட பிரபலமான கல்லூரிகளும் உள்ளன.
ரியல் எஸ்டேட் துறைகளும் நம்பமுடியாத வகையில் விலை உயர்ந்து மக்களின்

வாழ்க்கைத் தரமும் அவர்களின் செலவினங்களும் உயர்ந்து வருகிறது.
இதுதவிர கோவை மத்திய அலை 103 பண்பலையில் ஆல் இந்தியா ரேடியோவும்,
ரேடியோ சிட்டியும், ஹெலோ எஃப்.எம்-ம், மிர்சியும்,
செயல்பட்டு வருகின்றன.
”வாழ்க்கையில் உறவுகள் மேம்பட ” -சினோஜ் சிறப்புக் கட்டுரைகள்
சூலூர் குளம், உக்கடம் குளம் , பிளாக்தண்டர், விஜிவி வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட ஊர்கள் சிறந்த சுற்றுலாத்தளங்களாக உள்ளன.
அனைத்து அம்சங்களும் பொருந்திய இதையெல்லாம் பார்க்கையில்
தமிழ்நாட்டில் ஒரு தனிச்சிறப்பு பெற்ற
மாவட்டம் என்று கூறுவது மிகையல்ல.
சினோஜ்கியான்