எஸ்.ஜி.எப்.ஐ தேசிய ஸ்கேட்டிங் போட்டிகள் வெள்ளிப் பதக்கம் வென்று கரூர் பரணி பார்க் ஜோயல் தேசிய சாதனை மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்னாவில் இந்தியப் பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் எஸ்.ஜி.எப்.ஐ (SCHOOL GAMES FEDERATION OF INDIA – SGFI) சார்பாக 67-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தனி நபர் ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடிய கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் ஜோயல் செங்குட்டுவன் வெள்ளிப் பதக்கம் வென்று தேசிய அளவில் தமிழகத்திற்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர் ஜோயல் செங்குட்டுவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் M.சுபாஷினி, பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன், பள்ளியின் முதல்வர் K.சேகர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சாதனை மாணவரை பாராட்டி வாழ்த்தினர். புகைப்படம்: தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர் ஜோயல் செங்குட்டுவனைப் பாராட்டி வாழ்த்தும் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் S.மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்பிரமணியன்.