
நடிகர் விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு தமிழகம், ஆந்திரா, கேரளாவில் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
த.வெ.க தலைவர் விஜய் மீது போலீஸில் புகார்!
தற்போது விஜய், தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க, வெங்கட்பிரபு ட் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், திருப்பத்தூரை சேர்ந்த கதிர்(30 வயது) என்ற இளைஞர் நடிகர் விஜய்ன் தீவிர ரசிகர்.
இவர், கேரளம் மா நிலம் பாலக்காடு பகுதியில் உள்ள யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூச்சர் கலாம் புக் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்களின் முன்னிலையில் உலக சாதனை படைத்துள்ளார்.

அதன்படி, கடந்த 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி, 17 ஆம் தேதி இரவு 11 மணிவரை மொத்தமாக 36 மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய நீண்ட கவிதையை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய்யின் ‘கில்லி’ ரீ-ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…படக்குழு நெகிழ்ச்சி
நடிகர் விஜய் பற்றி அவர் எழுதிய நீண்ட கவிதைக்காக கதிருக்கு 2 விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#SinojkKiyan