
விஜய் ஆண்டனி நடிப்பில். விநாயக் வைத்திய நாதன் இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸான படம் ரோமியோ.
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் மிர்ணாளினி ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைக்க, விஜய் ஆண்டனி தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார்.
‘’திருந்திய ப்ளூ சட்டை’’- விஜய் ஆண்டனிக்கு பதிலளித்த புளூசட்டை மாறன்
இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் நடித்த விஜய் ஆண்டனியை ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

”திரைப்படத்தின் போஸ்டர் மூலம் சிகரெட்,மது காட்சிகளை
வைத்து சமூகத்தை சீரழிக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்,நடிகர்கள் அனைவரும் திரைப்படத்துறையில் மக்களால் ஒதுக்கி வைக்கபட வேண்டியவர்கள்.
ரோமியொ’ பட நடிகை மிர்னாளினியின் போட்டோ கேலரி!
திரைப்படத்தின் கதைகளத்திற்கு தேவையான காட்சி என்று பல காரணம் சொல்லி புகை,மது காட்சிகளை காண்பிக்கிறார்கள் ஆனால் போஸ்டர் மூலம் வியாபார நோக்கத்திற்காக அதுவும் மணப்பெண் கையில் பாட்டில் வைத்து விளம்பரம் தேடுவது கேவலமான ஒன்றாகும்.நடிகர் விஜய் ஆண்டனி மீது வைத்திருந்த நன்மதிப்பை இழந்துவிட்டார் எ”ன்று தெரிவித்துள்ளார்.
Sinojkiyan