
பெரியவர்களாயினும், சிறியவர்களாயினும் பொதுவாக எங்கு சென்றாலும் பார்த்து பத்திரமாகச் செல்வது ஒருபுறம் இருந்தாலும், எச்சரிக்கையுடனும், கவனமாக இருக்க வேண்டும்.
இதற்கு அனைவரையும் எச்சரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள லிப்டில் சேரி அணிந்து, மாஸ் முகத்தில் அணிந்த பெண் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாடியில் லிப்ட் நிற்கும்போது அவர் எங்கு இறங்குகிறார் என தெரியவில்லை.
ஆனால், கடைசியில் இளம்பெண் ஒருவர் அந்த லிப்டில் ஏறும்போது, சில நொடிகளில் அந்த சேரி அணிந்த பெண் தன் மயக்க மருந்து இருக்கும் கைக்குட்டையை அவரது முகத்தில் பொத்தி, அவர் மயங்கி கீழே விழுந்த பிறகு, அவரது கழுத்தில், கையில் அணிந்திருக்கும் தங்க நகைகளை எல்லாம் திருடிச் செல்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SinojKiyan