
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மோகன் ஜி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை, 2020 ஆம் ஆண்டு திரவுபதி, 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் பகாசுரன் என்ற படம் வெளியானது.
அடுத்ததாக ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கேரளாவில் பறவைக் காய்ச்சல்…..தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
’’இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
இது உண்மையா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ’’சென்னை தீவு திடலில் இந்த வருடம் நடந்த அரசு பொருட்காட்சியில் இரண்டு கடைகள் இதற்காக ஒதுக்கப்பட்டன.. பல கடற்கரைகளில் விற்பனை செய்கிறார்கள்.. திருமண விழாக்களில் தருகிறார்கள்.. உண்மையே..’’என்று தெரிவித்துள்ளார்.
Sinojkiyan