
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து 2002 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில். இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்று வசூல் குவித்தது.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்கிராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையடுத்து, ராகவா லாரன்ஸ் தனது 25 வது படமான ஹண்டரில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விஷாலின் அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாரத் இசையமைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அறிமுகம் இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் அதிகாரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதிகாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பட பணிகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன.இப்படத்தை வெற்றிமாறன், கதிரேசன் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்று இப்படம் பற்றிய அறிவிப்பை லாரன்ஸ் தன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
SinojKiyan