
கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்., கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இங்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளம் மாநில ஆலப்புழாவில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் நோய்த் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி, உயிரிழப்பதாகத் தகவல் வெளியானது.
எனவே ஹெச்5என்1 எனப்படும் பறவைக்காய்ச்சல் தமிழ் நாட்டிலும் பரவக்கூடும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கேரளாவில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழ் நாடு- கேரளம் எல்லைப் பகுதிகளான ஆனைக்கட்டி, வாளையார்,வேலவந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்புக் கால் நடைப் பராமரிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
#Sinojkiyan