
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில். இவர் 20 வயதில், அவரது அம்மா ஃபாசில் இயக்கத்தில் கையேத்து தூரத் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு அந்தோலஜி பிலிம் கஃபே, சாப்பா குரிசு,டைமண்ட் நெக்லஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
தமிழில், விக்ரம், புஷ்பா 1, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் தன் அபார நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான படம் ஆவேசம். இப்படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஃபகத் பாசில் மாதிரியே உருவத்தோற்றம் கொண்ட ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ”பார்க்க அச்சு அசல் அப்படியே ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிகிறார்.
இதென்னது, அச்சு அசலா ஃபகத் ஃபாசில் மாதிரியே இருக்காரு என்று ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
SinojKiyan