
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில். வி நாயக் வைத்திய நாதன் இயக்கத்தில் கடந்த 11 ஆம் தேதி ரமலான் பண்டிகையொட்டி வெளியான படம் ரோமியோ.
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் மிர்ணாளினி ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைக்க, விஜய் ஆண்டனி தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார்.
இப்படத்தைப் பற்றி சமீபத்தில் விஜய் ஆண்டனி தமிழ் டாக்கீஸ் என்ற தனது யூடியூப் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இன்று விஜய் ஆண்டனி, ரோமியோ போன்ற நல்ல படங்களைக் கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும். ரோமியோ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க ‘’என தெரிவித்தார்.
இதற்கு புளூ சட்ட மாறன் தன் எக்ஸ் தளத்தில், ‘’சினிமா ரசிகர்களே..
தரம் தாழ்ந்த விமர்சகரும், விமர்சன விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ரோமியோ ரிவியூவை புறக்கணிப்பீர்.
அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள்.
இப்படிக்கு, தற்போதைக்கு திருந்திய.. ப்ளூ சட்டை’’ என்று தெரிவித்துள்ளார்.
#Sinoj