
மணிரத்னம் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – மணிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியான படம் ‘உயிரே’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியிருந்தார். பிரீத்தி ஜிந்தா இப்படத்தில் அறிமுகமானார்.
இந்தியில் இப்படம் தில் சே என்ற பெயரில் வெளியானது.
ஒரு பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சம்பளம் இத்தனை கோடியா? அப்ப மத்தவங்க எல்லாம்?
இன்று வரை இப்படமும் சரி, இப்படத்தின் பாடல்களும் சரி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, கிளாசிக் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற சையா சையா, தமிழில் தையா தையா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரஹ்மான் இசையில், சுக்விந்தர் சிங் முழு எனர்ஜியுடன் இப்பாடலை பாடியிருந்தார்.
இப்பாடலைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சம்கீலா பட புரமோசன் நிகழ்ச்சியின்போது, ஏ.ஆர்.ரஹ்மானிடம் நெறியாளர் ஒருவர் உயிரே படத்தில் வரும் தையா, தையா என்ற பாடல் உங்களுக்குப் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்புகிறார்.
இளையராஜாவுக்கு போட்டியாக வந்த இருவருமே ஆஸ்கர் பெற்றனர்!
அதற்கு அவர், தையா தையா பாடல்தான் என்னுடைய பேவரைட் என்று கூறியிருந்தார்.
சையா, சையா என்று இந்தியில் எழுதப்பட்ட இப்பாடல், Tere ishu nachaya karke thaiya thaiya என்ற பிரபலமான சூஃபி பாடலின் தாக்கத்தில் இப்பாடல் எழுதப்பட்டது என்ற தகவல் வெளியாகிறது.
#Sinojkiyan