
உலகளவில் அதிகளவில் இந்தியாவில் ஆண்டுதோறும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில், கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மாலிவுட் என எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.
அதற்குக் காரணம் சினிமா கவர்ச்சிதான்.
கடந்த 1950 களில் இந்தியாவில் பிரபல பாடகர்களுக்கு சம்பளம் ரூ.300 என்றளவில் இருந்தது.
தற்போது முன்னணி பினன்ணி பாடகர்களுக்கு பல லட்சங்க்கள் சம்பளம் ஒரு பாடலுக்கே வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், 90-களில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசையால் உலக இசைப்பிரியர்களை, ரசிகர்களை கட்டிப்போட்டது மட்டுமில்லாமல், தன் குரலாலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
அவரது குரலில், வந்தே மாதரம், அரபிக் கடலோரம், நெஞ்சே எழு, விண்ணைத்தாண்டி வருவாயா, ஒரு புரட்சி, சிங்கப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், அதிக ஹைப் பிட்சில் பாடும் திறனுள்ள ரஹ்மான் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகிறது.
இதன் மூலம் இந்தியாவில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் பெறும் பாடகராக முத்திரை பதித்துள்ளார் ரஹ்மான்.

இதையடுத்து, ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு ரூ.20 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், அடுத்து, ஷான் மற்றும் சோனு நிகம் ஆகியோர் ஒரு பாடலுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகிறது.
அதேபோல், நேஹா கக்கர், மிகா மற்றும் ஹனி சிங் உள்ளிட்டோர் ஒரு பாடலுக்கு ரூ.10 லட்சம்வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகிறது.
#SinojKiyan