
2024 ஆம் ஆண்டு, 18 வது மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்றது. ஒரேகட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நேற்று மாலை 6 மணிக்குப் பிறகும் மக்கள் வாக்களித்ததால் இன்று அதிகாரப்பூர்வமாக எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்ற விவகரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
வாக்குச் சாவடியில் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்த நிலையில், இந்தியத்தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும், அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீதம் வாக்குகளும் பதிவானதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு- சத்யபிரதா சாகு
#Sinoj