
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் 360 வது படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளார்.
மோகன்லால் நடிப்பில், சவுதி வெள்ளக்கா பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கவுள்ள புதிய படம் எல் 360.
இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் நடிகை ஷோபனா இப்படத்தில் இணைந்துள்ளதாக ஷோபனா வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.