
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்தது.
ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நடைபெறும் என்பதால் தனது ஜனநாயகக் கடையை ஆற்றவே, மாஸ்கோவில் இருந்து விஜய் 12 மணி நேரம் பயணப்பட்டு சென்னை வந்த நிலையில், இன்று ஓட்டுப்போட்டார்.

அப்போது அவரது கையில் பிலாஸ்திரி போட்டிருந்தார். இது ஷூட்டிங்கின்போது, பைக்கில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்து என்று கூறப்படுகிறது.
கடந்த முறை சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்ட விஜய் இம்முறை காரில் வந்து ஓட்டுப் போட்டார்.