
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியனில் 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் இன்று நாடாளுமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது.
இன்று அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் சூரி இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்றார்.
ஆனால் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் அவர் பெயர் விடுபட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர். இதனால் சூரி தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.