
18 வது மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது.
தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 40 தொகுதிகளில் எந்த வாக்குப் பதிவு அதிகம் என்பதை தமிழகத் தலைமத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அதில், இம்முறை 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.
சிலர் இன்று மாலை 6 மணிக்கு வந்து வாக்களித்ததாக கூறப்படும் நிலையில், எத்தனை சதவீதம் என்பது இன்றிரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
கடந்த 2009 மக்களவை தேர்தலில் 73.2 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதேபோல் கடந்த 2014 ஆம் ஆண்டில்74.74 சதவீதமும், கடந்த 2019 ஆம் ஆண்டில் 72.47 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.