
சமீபத்தில் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வரலாறு காணாத மழையால் அங்கு பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு,சாலைகளிலும் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், அங்கு சாலையில் தேங்கியிருக்கும் வெள்ளத்தில், அங்குள்ள இளைஞர்கள் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
#EditedBySinoj