
தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் ரூ 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி ராணிப்பேட்டையில் ஆலை அமைக்கவுள்ளது டாடா மோட்டார்ஸ்.
ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிபண்டர் உள்ளிட்ட சொகுசு கார்கள் கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன.
இதற்கு முன்பு வெளி நாட்டில் தயாரான ஜாகுவார் லேட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவில் தயாராவது இதுதான் முதல்முறையாகும்.
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர் கார்கள் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகி வருகிறது.
இந்த நிலையில் ஆண்டிற்கு 2 லட்சம் லேண்ட் ரோவர் கார்களை தமிழ் நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த உற்பத்தியை வரும்காலத்தில் உயர்த்தவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
#EditedBySinoj